கோவையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடக்கம்
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். ரூ.33.56 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது இந்த திட்டம். இதனை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கோவை மாநகராட்சி மற்றும் மேட்டுப்பாளையம், மதுக்கரை ஆகிய இரு நகராட்சிகளில் இன்று முதல் கட்டமாக காலை உணவு திட்டம் துவங்கப்படுகிறது.
கோவையில் இந்த திட்டத்தை இன்று காலை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினார்.
இந்த திட்டத்தின் மூலமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 104 மாணவ, மாணவிகள் பலன் அடைகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா, ஆனந்தகுமார் கல்வி அதிகாரிகள், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply