ராமேஸ்வரம்: கள்ளக்கடல் எச்சரிக்கையை தொடர்ந்து, தனுஷ்கோடி செல்ல 2வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.பாக்ஜலசந்தி கடலில் பலத்த சூறைக்காற்றுடன் திடீரென கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் சில தினங்களுக்கு முன் எச்சரித்தது. மேலும் கடலில் மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் ...
வீடு புகுந்து தாக்கியது தொடர்பான வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சனுடன் சமரசமாகச் செல்ல விருப்பம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் அவரது சகோதரரின் மனைவி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் கடந்த 2022 ஆக.8-ம் தேதி சொத்துப் பிரச்சினை காரணமாக புதுச்சேரியில் உள்ள தனது அண்ணன் மரிய குலோத், அண்ணி ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு நேற்று தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே கைலாசநாதன், ...
மாநில நுகர்வோர் சேவைக்காக தானியங்கி உரையாடல் வசதியுடன் கூடிய வாட்ஸ் ஆப் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அதன்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு 13 மாவட்டங்களில் மொத்தம் 31 ஆயிரம் மெட்ரிக்டன் ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் சர்ச்சைக்குரிய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளால், அமெரிக்க வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் அவரது மக்கள் ஆதரவு வெறும் 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 1974-ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி, இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க ...
இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்கள் விளாசினர். அதேவேளையில் இலங்கை அணி 284 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சோனல் ...
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் காமரூன் எல்லை அருகே உள்ள சாம்போய் கிராமத்தில் இயங்கி வந்த சட்டவிரோதத் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பாபுவா நகரிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள சாம்போய் பகுதியில் அமைந்திருந்த திறந்தவெளித் தங்கச் சுரங்கத்தில், நிலத்தடிச் சுரங்கப் பாதைகள் ...
இறைவன் முன்பாக அனைத்து உயிர்களும் சமமானதே என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழிபாட்டுத் தலங்களில் யாருக்கும் எந்த பாகுபாடும் காட்ட இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் தேவராஜ சுவாமிகள் தேவஸ்தானம், வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் சன்னதியில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவ பக்தர்களிடம் சுவாமி தரிசனம் மற்றும் ...
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை நேற்று காலை கூடியதும் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் விஜய் பேசியதாவது: ஒரு உயிரின் மதிப்பை, அவரது வருமானம் தீர்மானிக்கக் கூடாது. வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை, ...













