ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். மலையாளிகளின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாகும். ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் ...

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பதிலளித்து பேசியபோது அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி ஊக்கு விப்புத் திட்டம் (சிஏஎஸ்) செப்.1-ம் ...

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், போகா ரேட்டன் கடற்கரைக்கு அருகே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய ரக இரட்டை என்ஜின் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை 23 வயதான ஃபெய்த் டென்க்லி என்ற இளம் பெண் விமானி இயக்கி வந்தார். பஹாமாஸ் தீவில் உள்ள தனது பெற்றோரை அழைத்து வருவதற்காக அவர் தனியாகப் ...

மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 13,538 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து ஏற்ற இறக்​கத்​தில் உள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்​ணீர் வந்து கொண்​டிருந்​தது. மாலை​ 12,324 கனஅடி​யாக​வும், நேற்று காலை 12,883 கனஅடி​யாக​வும் நீர்​வரத்து உயர்ந்​தது. ...

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வருசநாடு மலைப்பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இப்புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளான தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை, வருசநாடு, தும்மக்குண்டு உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 98 கிராமங்களில் வசித்து, விவசாயம் செய்து வரும் 4,601 விவசாயிகளை துணை ராணுவ படை உதவியுடன் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ...

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நைஜர் மாநிலத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், 60-க்கும் மேற்பட்ட பொதுமக்களைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.நைஜர் மாநிலத்தின் போர்கு (Borgu) உள்ளாட்சிப் பகுதிக்கு உட்பட்ட தேகாரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குள் கனரக ஆயுதங்களுடன் நுழைந்த பயங்கரவாதக் கும்பல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளி வழிபாட்டின் ...

அமெரிக்​கா​வில் 2 இந்தியர்கள் வெவ்​வேறு சம்பவங்களில் சுட்​டுக் கொல்​லப்​பட்டனர். அவர்களின் உடலை தாயகம் கொண்டுவர வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர். பஞ்​சாப் மாநிலம் கபூர்​தலா மாவட்​டத்​தைச் சேர்ந்த குர்​தீப் சிங் (28), அமெரிக்​கா​வின் நியூ​யார்க்​கில் பீட்சா டெலிவரி செய்​யும் வேலை பார்த்து வந்​தார். நேற்று முன்​தினம் இரவு ரிச்​மண்ட் ஸ்ட்ரீட் பகு​தி​யில் பீட்சா டெலிவரி ...

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகவும், புதிய விமான நிலையம் அமைக்க மாற்று இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் தொடக்கத்திலிருந்து பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர்.. இது பற்றி எந்த அறிவிப்பும் ...

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’  என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் , இந்த நடவடிக்கையானது ஈரானின் எஞ்சியிருக்கும் அனைத்துப் பொருளாதாரக் கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட ...

தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளின் விவரங்களை காணலாம். தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் குடும்பங்களுக்கான இலவச சமையல் எரிவாயு சிலிண்டர், ...