கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பணியாளர்கள் தினத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, கல்லூரியில் ஜி.ஆர்.டி பிறந்த நாளை பணியாளர்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். எனது மகன் சுகநாதன், மருமகள் திவ்யா ஆகியோரும் இங்குதான் பணியாற்றி வருகிறார்கள். அதனால் நானும் இந்த குடும்பத்தை சேர்ந்தவர் தான். தேசிய ...
குனியமுத்தூர்:ஆந்திராவை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி மனீஷா (வயது 25). இவர்கள் கோவை சுந்தராபுரம் காமராஜர் நகரில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மனீஷா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ...
கோவை போத்தனூர் அருகே சாரதா மில் ரோட்டில் எதிர் எதிரே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் அங்கு வியாபாரம் நடந்து கொண்டே இருக்கும். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக தான் செல்ல வேண்டும். ஏனென்றால் டாஸ்டாக் கடையில் குடித்து விட்டு வரும் குடிமகன்கள் குடிபோதையில் ...
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 38). என்ஜினீயர். இவருக்கு பணத் தேவை ஏற்பட்டது. அதனால் தங்க நகையை அடமானம் வைக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் சிவானந்தா காலனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்றார். அங்கு தனது 2 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து ரூ.41 ஆயிரத்தை பெற்றார். அதன் ...
கோவை: நெல்லை கரையிருப்பை சேர்ந்தவர் தாடி வீரன். இவரது மகன் சுப்பிரமணி (வயது 28). ஆட்டோ டிரைவர். இவர் கோவை ஆவாரம்பாளையம் சபா நகரில் தங்கி இருந்து சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவரை அவரது நண்பரான லோடு வேன் டிரைவர் சாரங்க பாணி (31) என்பவர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். ...
ஈரோடு: இலவசங்களுக்கும், இரண்டு, மூன்றாயிரம் ரூபாய்களுக்கும் மக்களின் ஓட்டை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் 21-ந்தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். திறனற்ற திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கீனம் நிலை சந்தி சிரிக்கிறது. குற்றவாளிகளின் கரத்தில் இருக்க வேண்டிய ...
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதமாக இதர சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதத்தை வசூலிக்க அவர்களின் வாகனம், அல்லது மற்ற சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக, சாலை விதிகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சாலை ...
கர்நாடகா இந்து அறநிலையத்துறை கமிஷனராக இருப்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி. இவர் மைசூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, இவருக்கும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ சா.ரா.மகேஷுக்கும் அரசு நிலம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதில், மைசூர் மாவட்ட ஆட்சியராக சிந்தூரி இருந்தபோது அவர் அரசு கட்டிடத்தில் விதிமுறைகளை மீறி நீச்சல் குளம் கட்டியதாக ...
பிரேசிலில் பெய்த கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் பெய்து வந்த கனமழையால், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, நகரில் 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதனால் வடக்கு சாவ் பாலோ மாநிலத்தில் உள்ள இரண்டு நகரங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் பிரேசில் ...
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார். குமலன்குட்டை, கணபதிநகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்கிறார். பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை மாலை எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட ...