தமிழகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி அதாவது இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி மாநிலத்தில் இரண்டு புள்ளி 60 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் ...

தமிழ்நாட்டில் சமீப காலமாகவே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுக தொடர் குற்றச்சாட்டை சுமத்தி வருகிறது. அதற்கு ஏற்றார்போல், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் நான்கு ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி, கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது ...

கோவையில், கடந்த ஆண்டு நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர், சட்டம் – ஒழுங்கு, பாதுகாப்புத் தொடர்பாக ஆளும் தி.மு.க அரசுமீது தொடர்ச்சியாகப் பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அரசியல் வட்டாரங்களில் எழுந்தவண்ணமே இருக்கின்றன. இப்படியான சூழலில், கோவை நீதிமன்ற வளாகத்திலேயே இன்று காலை இளைஞர் ஒருவர், ஐந்துபேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு வரும் 27-ந் தேதி அந்த தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ...

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் ...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், அவருடைய மனைவி, மகள் ஆகியோர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் உரிய நேரத்தில் வெளிப்படுவார்கள் எனவும் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்று பழ. நெடுமாறன், காசி ஆனந்தன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர். இந்தச் ...

தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பழ. நெடுமாறன் எல்லோருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்னைக்கு நம்முடைய தமிழின தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை பற்றிய உண்மை அறிவிப்பினை அறிவிப்பதில் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகின்றேன். இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பிய சிங்கள மக்களின் போராட்டம் தமிழின தேசிய தலைவர் வெளிப்படுவதற்கான ...

இந்தியா முழுவதும் ஒரு நிலையம், ஒரு பொருள் என்ற திட்டத்தை ரயில்வேதுறை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட ரயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை விற்பனைக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5000 ரயில் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி தெற்கு ரயிவேக்கு உட்பட்ட 6 ரயில் நிலைங்களில் பிரபலமான உள்ளூர் தயாரிப்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மதுரை ...

புதுடெல்லி: 90 மணி நேரங்களில் 10 தேர்தல் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுமார் 10,800 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கவுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திரிபுரா மாநிலத்துக்கு வரும் 16-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுமட்டுமல்லாமல் மும்பை பெருமாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் ...

சென்னை: ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆளுநராக அவரது பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ...