ஜன.1ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,-சி58 ராக்கெட்…

சென்னை: ‘இஸ்ரோ’ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – சி 58 ராக்கெட் உதவியுடன், ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளை ஜன., 1 காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
செயற்கைக்கோளின் மொத்த எடை, 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., துாரம் உள்ள புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும்.செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ் – ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்யும். இதன் ஆயுள்காலம், 5 ஆண்டுகள்.