இந்த 4 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது… ஊழியர்கள் ஸ்ட்ரைக்..!!

மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க எடுத்துவரும் முயற்சிகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மே 30, 31 ஆகிய நாட்களில் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எதிர்த்து இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என பேங்க் ஆப் பரோடா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய வகைகளான இந்த இரு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது இதனால் மே 30, 31 தேதிகளில் நாடு முழுவதும் வங்கி கிளைகள் மூடப்பட்டு ஊழியர்கள்பேரணி, தர்ணா போன்ற போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 30, 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் வங்கிகள் செயல்படாது. அதற்கு முன்பு மே 28, 29 ஆகிய தேதிகளில் நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த இரண்டு நாட்களும் வங்கிகள் செயல்படாது. எனவே மே 28ம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கி செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.