திருமணமானதை மறைத்து பிளஸ்-2 மாணவியை காதலித்து பாலியல் பலாத்காரம்- மின்வாரிய ஊழியர் போக்சோவில் கைது..!!

கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி.
பிளஸ்-2 மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு மாணவிக்கு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்க்கும் சூர்யா (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் , பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் சூர்யா மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை அவரை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் சூர்யாவை அழைத்து தங்களது மகளுடன் பழகுவதை நிறுத்துமாறு எச்சரித்தனர். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சூர்யா வேறுஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர் தொடர்ந்து மாணவியுடன் பழகி அவரை பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
சூர்யா தன்னை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த விவகாரம் மாணவிக்கு தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக சூர்யாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருந்த அவரிடம் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று என்ன நடந்தது என மாணவியிடம் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் மாணவி தன்னை சூர்யா பாலியல் பலாத்காரம் செய்த விவகாரததை கூறினார்.
மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது என கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மாணவியுடன் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர்.
போக்சோ
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி திருமணம் நடந்ததை மறைத்து பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த சூர்யாவை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.