அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. கைது நடவடிக்கையின் போது அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ததில் அவரது இதய ரத்தக் குழாய்களில் 3 அடைப்பு இருப்பது ...
செந்தில் பாலாஜி வழக்கில் ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு , அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ...
ஹோண்டுராஸின் பெண்களுக்கான சிறையில் கலவரம் வெடித்ததில், 41 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸின் பெண்களுக்கான ஒரே சிறையில், கலவரம் ஏற்பட்டதில் 41 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது நாட்டின் சிக்கலான சிறை அமைப்பில் நடந்த வன்முறை வெடிப்புகளில் ஒன்றாகும் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. அரசு வழக்கறிஞர் அலுவலக ...
ஒரு கையில் பீர்பாட்டில்.. இன்னொரு கையில் சிகரெட்… கோவை மாநகரில் உள்ள ஒரு “டாஸ்மாக் பார்” ல் எந்த தயக்கமும் இன்றி ஓர் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பர்களுடன்…மதுவும், புகையும்.. கல்லூரி மாணவி தண்ணி அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி கடுமையான அதிர்ச்சி கலந்த வேதனையை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவை யார் ...
நியூயார்க்: நான் மோடியின் ரசிகன் என்றும் அவரை ரொம்ப பிடிக்கும் என்றும் டுவிட்டர் நிறுவன தலைவர் எலான் மஸ்க் கூறியுள்ளார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின்னர் எலான் மஸ்க் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி 4 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு பிரதமர் ...
சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் மாநகர போலீசாரின் யோகா பயிற்சி போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று நடந்தது.இதில் மாநகர போலீசார் 650 பேர் பங்கேற்றனர்..கோவை மாநகரில் பணிபுரியும் காவலர்களின் நலனுக்காக ஒரு நாள் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை மாநகர போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ...
தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ...
சென்னை: சங்கிகள் முட்டாபயலுக என்றால் முதலில் நம்பமாட்டேன் என்றும் ஆனால் அவர்கள் அடிமுட்டாள்கள் என்பதை இப்போது தான் உணர்ந்தேன் எனவும் கூறி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலினின் தம்பி ராஜமூர்த்தி. முதலமைச்சர் ஸ்டாலினின் மைத்துனரும், துர்கா ஸ்டாலினின் தம்பியுமான மருத்துவர் ராஜமூர்த்தி பரபரப்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வேளாண்மை விற்பனையாளர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இந்த ஆண்டு பருத்தி ஏலம் நேற்று தொடங்கியது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரியப்பம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், டிஜி புதூர், கடத்தூர், கோரமடை, பெரியூர், உக்கரம், காராப்பாடி, சிங்கிரிபாளையம், உடையாக்கவுண்டன்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கும் பருத்தியை சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ...
சத்தியமங்கலம்: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதி 32 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளதாகும். பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் மூலம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அணையில் மீன் பிடிக்கும் ...