ஆவடி: ஆவடி காவல் ஆணையரக ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி மாணவ – மாணவிகள் 3,397 பேர் ‘எனக்கு வேண்டாம் போதை நமக்கும் வேண்டாம் போதை’ என்ற விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்கி உலக சாதனை புரிந்தனர். ஆவடி காவல் ஆணையரகம், ஏசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸுடன் இணைந்து, பள்ளி மாணவ – மாணவிகளின் பங்கேற்பில் உலக சாதனையை உருவாக்கும், ...
கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில் வேலை ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., ‘நுணலும் தன் வாயால் கெடும்’ என்பதை மெய்ப்பிக்கும் வகையிலும்; ‘வாய்க் கொழுப்பு சீலையில் வடிகிறது’ என்பது போலவும்; தான் வகித்த மந்திரி பதவிக்கும், தற்போது வகிக்கும் எம்.பி., பதவிக்கும் தகுதியற்ற, தரமற்ற, தற்குறி புத்திகொண்ட ‘ஆண்டிமுத்து ராசா’ என்ற நாலாந்தரப் பேர்வழி, தமிழக மக்களின் இதய ...
சென்னை: சாலையோரத்தில் கல்லை நட்டு துணியைப் போர்த்தி பூஜைகள் செய்து சுவாமி சிலை எனக்கூறும் அளவுக்கு நாட்டில் மூட நம்பிக்கைகள் நிலவுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார். பல்லாவரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள கல்லை சிலர் துணியைச் சுற்றி சிலை எனக்கூறி வழிபாடு செய்து வருவதாகவும், எனவே அந்தக் கல்லை ...
புதுடெல்லி: 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வியாழக்கிழமை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. இந்நிலையில், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியையும், பிரதமர் மோடி ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வாா்த்தை தீவிரமடைந்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினா் ஞாயிற்றுக்கிழமை பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரையிலான பேச்சு வாா்த்தையில் கூட்டணிக் கட்சிகள் கடந்த தேர்தலைவிட கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளன. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக ...
பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ...
இந்தியாவின் சக்தி இசைக் குழுவினருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல இசைக்கலைஞர்களுக்கு உலகின் மிகப் பெரிய விருதாக கருதப்படுவது அமெரிக்காவின் கிராமி விருது. கடந்த 1951ம் ஆண்டு முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் இந்த விருதுகளை தேசிய ஒலிபிடிப்பு கலைகள் மற்றும் அறிவியல் ...
மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் பாஜக தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கூட்டணி குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. ...
திண்டுக்கல்: அதிமுகவை மீட்டெடுக்காமல் விட மாட்டோம் என அமமுக மாநில பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். திண்டுக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட அமமுக பூத் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்டச் செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வ பாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது: ...












