இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் இன்று தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என்றும் ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் பணிகள் நடைப்பெற்று வருவதால், இன்று முழுவதும் ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ...
அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு பலரும் பல்வேறு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாக்பூரை சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ ரவை அல்வாவை செய்வார்.இதில், 900 கிலோ ரவை, 1000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 ...
சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில் இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த ...
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்படவில்லை. அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி பொங்கல் பண்டிகைக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் எனவும் போராட்டத்தை கைவிடவேண்டும் எனவும் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி ...
சென்னை எண்ணூர் அருகே பெரியகுப்பம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கடந்த 27ஆம் தேதி திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30-க்கு மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி மேயர்மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், திமுக கவுன்சிலர்கள் விருதுநகருக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மேயர் பி.எம்.சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இதன் மீதான வாக்கெடுப்பு ஜன.12-ம் தேதி (இன்று) நடைபெறும் என்று ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 150வது சட்டமன்றத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது நடைபயணத்தை மேற்கொண்டார். ஜிஆர்டி சதுக்கத்திலிருந்து, பாகலூர் சாலை, ராமர் கோவில் சாலை வழியாக பழைய பெங்களூர் சாலை ஆகிய பகுதிகளில் வேனில் இருந்தபடியே மக்களை சந்தித்தார். என் மண் என் மக்கள் யாத்திரையில் அண்ணாமலை இதைத் தொடர்ந்து ராம் நகர், ...
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பேரணி நடத்த இருக்கும் நிலையில், தி.மு.க. சார்பிலும் மாணவரணியைச் சேர்ந்த 1,500 பேர் கலந்து கொள்கிறார்களா?’ என்ற கேள்விக்கு, ‘புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுகவின் மாணவர் அணியினர் ...
நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி முதல்வர் தமிழ் துறை தலைவர் வாகிதா தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர் ,இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் பண்டிகை மத வேறுபாடு என்று கொண்டாட்டத்தில் ...
நீலகிரி மாவட்டம் தேவாலா காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை புலி தாக்கியதில் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது மற்றும் நான்கு வயது சிறுமி காயம் அடைந்துள்ளார் இதனை கண்டித்து தேவாலா உட்கோட்டத்தில் பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களில் ஈடுபட்டனர். வனத்துறையினர் அந்த சிறுத்தைப் புலியை ...













