கோவை காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் ..ஆவாரம்பாளையத்தில் உள்ள கிரைண்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார் .அப்போது மாணிக்கம் தனது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன் ...

நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர் இம்மானுல் ( வயது 38)இவரதுவிசா காலாவதியானபிறகு கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இது பற்றி தகவல் அறிந்தததும்ரேஸ்கோர்ஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் விசா முடிந்த பிறகும் அவர் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் ...

கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமுதம் அங்காடி என்ற பெயரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வேடப்பட்டி குருடம்பாளையத்தைச் சேர்ந்த மதிஅரசு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன் தினம்ரேஷன் கடையில் இருந்த ரூ 1லட்சத்து 22 ஆயிரத்தை திருடி கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சுரேஷ்குமார் சாய்பாபா காலனி ...

கோவை அருகே உள்ள பி. என் .புதூர் ,ரத்தின சபாபதி முதலியார் வீதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி விஜய லட்சுமி ( வயது 84 ) இவர் தனியாக வசித்து வருகிறார். நேற்று இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 50 வயது மதிக்க ஒரு பெண் அவரது வீட்டுக்கு சென்றார் வீடு வாடகைக்கு ...

கோவை ஆர் .எஸ் . புரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் ஆனந்த் (வயது 30) இவர் நேற்றுமேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி பகுதியில்வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரை தடுத்து நிறுத்த முயன்றார்.அவர்கள் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளில் சென்றனர். போலீஸ்காரர் தனது ...

கோவை ரங்கே கவுடர் வீதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் துரைராஜ் பாண்டியன் ( வயது 52)இவரது கடையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பக்கம் உள்ள பேரூரை சேர்ந்த செந்தில் குமரன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.கடந்த 4-ந் தேதி இரவில்செந்தில்குமார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று கதவைத் திறந்து ...

கோவை பீளமேடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் நேற்று தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார் .அவரது கணவர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டார் அந்த பெண் அங்கு தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து ...

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம்,வேலாந்த வளம் ரோட்டை சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவரது மனைவி மகேஸ்வரி என்ற நந்தினி (வயது 26) இவர்களுக்கு கிருஷ்ண பிரசாந்த் ( வயது 8)தருண் பிரசாந்த் (வயது 5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.கடந்த மாதம் 31 ஆம் தேதி மகேஸ்வரிதனது இரு மகன்களுடன்,வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கணவர் மாணிக்கராஜ் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள அறிவொளி நகரச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி ( வயது 60 )இவர் நேற்று அங்குள்ள சடையாச்சி மாரியம்மன் கோவில் அருகே ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது. இதில் ராஜலட்சுமி படுகாயம் அடைந்தார். ...

கோவை மாவட்டத்தில் மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் நிர்வாக வசதிக்காக கோவை வடக்கு, கோவை தெற்கு என்று 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை வடக்கு பகுதியில் 155 டாஸ்மாக் கடைகளும், கோவை தெற்கு பகுதியில் 129 கடைகள் உள்ளன. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை ...