மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேசம் முழுவதிலும் அரசியல் களம் தகிதகிக்கிறது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங்கீடுகள், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்கள் என நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2ஆம் தேதி வெளியான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ...
புதுடில்லி: ‘குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால், சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த அந்தந்த நாட்டு சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் ...
கோவை தெற்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமை வகித்து, திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். மாநகராட்சி 64-வது வார்டு புலியகுளம் பெரியார் நகர், 82-வது வார்டு இஸ்மாயில் ராவுத்தர் வீதி, 67-வது வார்டு ...
தேசியத் தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகாபஞ்சாயத்து நடைபெறுகிறது. வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக் கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள், டெல்லியை நோக்கி செல்லும் பேரணியை தொடங்கின. இதன் காரணமாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு ...
சென்னை: மக்களோடு பலமான கூட்டணி வைத்திருக்கிறோம் என்று அதிமுக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று இஃப்தார் நோன்பை திறந்துவைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் ...
பொள்ளாச்சி: மத்தியில் நமக்கு சாதகமான ஆட்சி அமைந்தால், தமிழகத்தில் இன்னும் 10 மடங்கு கூடுதலாக சாதனைகளை செய்ய முடியும் என பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவை மாவட்டம் பொள்ளாச்சிஆச்சிபட்டியில், கோவை, திருப்பூர்,ஈரோடு, நீலகிரி மாவட்டங்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, 57,325 ...
செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நுழைந்து வரும் நிலையில் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது என்றும், அது மட்டுமின்றி ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்களின் வேலை பறிபோய் கொண்டு இருக்கிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம். 10 அல்லது 20 ஊழியர்கள் ஓரு நாள் முழுவதும் செய்யும் ...
2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது ...
கோவை மாவட்டம் காரமடைபாலாஜி நகரில் உள்ள கனகராஜ் கோழிப்பண்ணையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக காரமடை போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் சிட்டுவிளையாடியதாக ஆலங்கொம்பு பெரியசாமி (வயது 34) காட்டூர் முத்துக்குமார் (வயது 27) மேட்டுப்பாளையம் முகமது அசாருதீன் (வயது 23) ஆலங்கொம்பு ...
கோவை பக்கம் உள்ள பேரூர் செல்லப்ப கவுண்டனூர் புதூர் லீலா நகரை சேர்ந்தவர் மாணிக்கம் .இவரது மனைவி காளீஸ்வரி ( வயது 36) இவர் அரசு பஸ்சில் பயணம் செய்தார். செல்லப்பகுளம் பிரிவு அருகே பஸ்சிலிருந்து இறங்கும் போது தவறி கிழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த ஏற்பட்டது. சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர் ...












