விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில், வழக்குகளில் விசாரணைக்காக வருபவர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது, ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் பல்லைப் பிடுங்கி துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக ...
ஸ்பெயினில் இன்று முதலீட்டாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஸ்பெயின் நாட்டின் ரொகா, எடிபோன், சிஐஇ ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் இன்று ஆலோசனை செய்கிறார். மேலும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு ...
மணிப்பூர் மாநிலத்தில் இருந்து பாரத் ஜோடோ நியாய யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். பாஜகவிடம் இருந்து நாட்டு மக்களுக்கு நியாயம் கோரும் வகையில், ஜனவரி 14ஆம் தேதியன்று தொடங்கிய பாரத் ஜோடோ நியாய யாத்ரா நடைபயணமானது மார்ச் 20ஆம் தேதி மும்பையில் நிறைவடையவுள்ளது. இந்த யாத்திரை நடைபயணமாகவும், பேருந்திலும் மேற்கொள்ளப்படுகிறது. மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் ...
சென்னை: வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள், அடுத்தமாதம் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நம் நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலைஉணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சியிலும் பல்வேறு சாதனைகளை செய்துவருகிறது. இதற்கிடையே, உலகளாவிய பருவநிலை ...
குஜராத் மாநிலத்தில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால். மக்கள் அதிர்ச்சி.. இது ரிக்டா் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானது என நிலநடுக்கவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை 4.45 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, பச்சாவிலிருந்து வடக்கு வடமேற்கு திசையில் 21 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் உணரப்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிா் மற்றும் ...
கோவை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்ட போட்டிகளுக்கான தடை நீங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிகளுக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டுமிரண்டி விளையாட்டு என்றார். ...
கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் ...
டெல்லி: பிப்.1-ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடக்கிறது. 3 மாதங்களுக்கு பிறகு பிப்ரவரி 1-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி நடந்த ...
பாரிஸ்: கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-பாலஸ்தீன போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இரண்டாவது முறையாக தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக பிரான்ஸில் சிஐஏ, மொசாட் மற்றும் கத்தார் பிரதமர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக ...
சென்னை: தேமுதிக தலைமையகத்தில் கட்சிக் கொடியேற்றி மக்களவைத் தேர்தல் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தொடங்கியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிச.28-ம் தேதி காலமானார். அவரது உடல் டிச.29-ம் தேதி மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமையகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ...