‘மெக் லைஃப் சயின்சஸ்’ நிறுவனத்தின் மாத்திரைகளை வாங்க வேண்டாம் என பொதுமக்களை, இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரித்துள்ளது. இந்த மாத்திரைகள் போலியானவை எனத் தெரிவித்துள்ள ஆணையம், சுண்ணாம்புத் தூள் மற்றும் கஞ்சியில் தயாரிக்கப்படுவதால் இது மிகவும் ஆபத்தானது எனக் கூறியுள்ளது. மேலும் இந்த மாத்திரைகளை ஏற்கெனவே யாரேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ...
சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் மண்டபம் கடலோர காவல் படையினர் இணைந்து சோதனை நடத்தினர். 99 கிலோ எடையுள்ள ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்து 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.. போதைப் பொருள் கடத்தலுக்கு ...
கோவை; மார்ச் 5. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் வருவாய் துறை அதிகாரி ஷர்மிளா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 507 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு 30 வயது ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லியாளம் நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்கள் தலைமையில் நெல்லியாளம் நகராட்சி மூன்றாவது வார்டு சத்துணவுக் கூடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு ...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார். ரேகா ...
திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் ...
வால்பாறை நகரம் சிங்கோனா எஸ்டேட் பகுதியில் கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கைப்பந்து போட்டி தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு மற்றும் சான்றிதழ்களைகோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் வழங்கி சிறப்பித்தார்.தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பற்றி ...
தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ ...
திமுக தவிர மற்ற இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது ...
28.2.2024 அன்று ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் தேசிய அறிவியல் தினவிழா கொண்டாடப்பட்டது இவ்விழாவில் காஞ்சி கோவில் மற்றும் கோபி பகுதியைச் சார்ந்த பள்ளிகளிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் ...