நம் அண்டை நாடான சீனா இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் உலக நாடுகளே எட்ட முடியாத அளவுக்கு வெகுதூரம் முன்னேறிச் சென்றுவிட்டது. 2000-களின் தொடக்கத்தில், இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த சாலை உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்தியது. ஆனால் சீனா, சாலைகளோடு சேர்த்து அதிவேக ரயில்களுக்கான உத்தியைக் கையில் எடுத்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ரயில்வே நெட்வொர்க்கே ...
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தலைமையில், நாளை (ஜூலை 1) சென்னை கோவளத்தில் கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தவெக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டம் இது என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் தவெக ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்த ...
ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் குறைந்துள்ள நிலையில், சென்னையில் பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் வகைகளின் விநியோகம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் கொள்முதல் தற்போது 26 லட்சம் லிட்டராக சரிந்துள்ளது. இதனால், பச்சை நிற பால் பாக்கெட் உட்பட பல்வேறு பால் ...
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (29.6.2026) பிற்பகல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசுகையில், ‘வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில்தான் மக்கள் நமது ...
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் நிறைவடையப் போகும் நிலையில், முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு..முதல்வர் விஜய் தனது உரையில், ‘மக்களிடம் ...
தமிழகம் முழுவதும் நடைபெற்ற போலியோ தடுப்புச் சொட்டு மருந்து முகாமின் போது, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குள் ஒருசில அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களைச் சேர்ந்தவர்கள் எவ்வித அனுமதியுமின்றி நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கிருந்த குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்குவது போலவும், மருத்துவப் பதிவேடுகளை ஆய்வு செய்வது போலவும் ‘ரீல்ஸ்’ ...
திருப்பூரில் மருத்துவமனைக்கே செல்லாமல், எவ்வித மருத்துவ ஆலோசனையும் பெறாமல், யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில் கர்ப்பிணிப்பெண் இறந்துள்ளார். இதில் பிறந்த பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மரணம் தொடர்பாக, இறந்துபோன பெண்ணின் கணவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது செய்யவில்லை என்று காவல்துறையினர் கூறினர். சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ...
தெற்கு மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட பயாஸ் பிரேம்ஜி, அங்கிருந்தவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் (Painkillers) என்று பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளார். இதனை ...
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 672 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் தங்க இருப்புகளில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியாகும். தங்க இருப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, ...













