கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலிசோம்னோ கிராபி எனப்படும் குறட்டை நோய் பரிசோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடா்பாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ.நிா்மலா கூறியிருப்பதாவது: அதிக உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஏற்படும் குறட்டை நோய் பாதிப்பைக் கண்டறியும் பாலிசோம்னோ கிராபி கருவி, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை அரசு மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமாா் ரூ.15 ...
பிஜிஆர் நிறுவன விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்க உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எண்ணூர் அனல் மின் நிலைய திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமான BGR எனர்ஜி நிறுவனத்துக்கு, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் சார்பில் அரசு வழங்கியது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், மதுரையில் ...
ரஷ்யா உலகின் மிக பயங்கரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான “எக்ஸோஸ்கெலட்டன்”(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை நடைபெற்று வரும் ...
புதுடில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 42 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யும் திட்டத்தை ஜப்பான் பிரதமர் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடோ, அரசு முறை பயணமாக இன்று(மார்ச் 19) இந்தியா வர உள்ளார்.இது தொடர்பாக அந்நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ...
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரி யுவராஜ், அருண், ...
5 சவரன் நகை கடன் தள்ளுபடி… 31ம் தேதிக்குள் அனைவருக்கும் திருப்பி வழங்கப்படும்- அமைச்சர் அறிவிப்பு..!
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. இதைதொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் 5 சவரன் நகைக்கடன் பெற்ற ...
லக்னோ: நடந்து முடிந்த உ.பி., மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதனையடுத்து உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் வரும் 25 ம் தேதி முதல்வராக பதவியேற்கிறார். உ.பி., உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கடந்த பிப்., முதல் மார்ச்., 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநிலத்தை ...
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே கஞ்சா உள்ளிட்ட போதைப்பழக்கஙகள் மாணவர்கள் உள்பட இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதைத்தடுப்பதற்கு போலீசார் மத்தியில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள் மாணவர்களுக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதை மாத்திரை விற்பனை செய்யும் கும்பலை கூண்டோடு பிடிக்க ...
ஐரோப்பிய மற்றும் ஆசியக் கரைகளை இணைக்கும் துருக்கி டார்டனெல்லஸ் ஜலசந்தியில் ஒரு நீளமான தொங்கு பாலம் நேற்று திறக்கப்பட்டது.இந்த பாலத்தை துருக்கி ஜனாதிபதி மற்றும் தென் கொரியாவின் பிரதமர் ஆகியோர் திறந்து வைத்தனர். இப்பாலம்,உலகின் மிக நீளமான தொங்கு பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக,துருக்கி ஜனாதிபதி தாயீப் எர்டோகன் கூறுகையில்: “துருக்கியின் ஐரோப்பிய ...
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சென்னையில் புதுவிதமான போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு ...