கோவையில் ஆதரவற்றவரை அடைத்து வைத்த மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தன்னார்வ அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது கோவை மாநகரில் சாலையில் தங்கிய ஆதரவற்றவர்கள் மற்றும் பணிக்குச் சென்றவர்கள், பேருந்துக்கு காத்திருந்தவர்கள் என 100க்கும் மேட்டோரை தன்னார்வ அமைப்பினர் தூக்கிச் சென்று, தொண்டாமுத்தூர் அட்டுக்கல் பகுதியில் அடைத்து வைத்து மொட்டையடித்து அவமானபடுத்தினர். ...
பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளி கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகத் திறனாய்வு உடன் திறன் தேர்வு போட்டிகள் பள்ளி கல்வித்துறை சார்பாக இன்று தொடங்கியது. திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், ...
கோவை அரசு மருத்துவமனையில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்ட, 18 பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். குறித்து, கலெக்டர் சமீரன் கூறியுள்ளதாவது: கோவை அரசு மருத்துவமனையில் என்.எச்.எம்., மூலம் ஒதுக்கப்பட்டுள்ள, காலி பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. பன்முக பணியாளர்- 2, மருத்துவ ...
ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் கட்டிய கட்டிடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு கோவைபுதூர் பகுதியில் ஜே ஆர் டி ரியல் எஸ்டேட் மூலமாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் கோவைப்புதூர் மற்றும் குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகள் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என ...
டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளை செயல்படுத்த காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் காவிரி நதிநீர் பங்கீட்டை உறுதி செய்யும் ஆலோசனைகளை வழங்கக் கூடியது. டெல்லியில் காவிரி ஆணையத்தின் 16-வது ...
சென்னை: பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை குருநானக் கல்லூரி பொன்விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மாணவிகளுக்கு எதிரான செயல்களை அரசு வேடிக்கை பார்க்காது என்றார். கொரோனா தொற்றால் எனது தொண்டை பாதிக்கப்பட்டு இருந்தாலும் தொண்டு பாதிக்கப்படவில்லை எனவும் கூறினார். ...
பூட்டிய வீட்டில் தூக்கு போட்டு இறந்த மகன் பிணத்துடன் மூன்று நாட்கள் இருந்த தாய்: கோவையில் பரபரப்பு கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீவல்லி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் என்பவரின் மகன் சிபி சுப்பிரமணியம் (43). கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாக வில்லை. இவரது தந்தை ...
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு, எடப்பாடி கே பழனிசாமி ஒரு பக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ பன்னீர்செல்வம் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று முன்தினம் ஓபிஎஸ் விடுத்த அறிவிப்பில், அதிமுகவிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் ...
டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...
பத்திரிகையாளர் நல நிதி ரூ.2.50 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிகையாளர் நல வாரியம்’ அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அத்துடன் தமிழ்நாட்டிலுள்ள பத்திரிகைத் துறையினர் நலன் கருதி, பத்திரிகைத் துறையில் தொடர்ந்து பணியாற்றிய ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், செய்தியாளர்கள், ...