அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல் நீதிபதிகள் மற்றும் அரசியலமைப்பு பிரதிநிதிகள் மீது கருத்துக்கள் வெளியிடப்படும் சமூக வலைத்தள ஊடகங்கள் மீது டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக இணையத்தில் கருத்துக்களை வெளியிட்டது தொடர்பான வழக்கில் கைதான ஒருவர் மனு தாக்கல் ...

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யார், யார் குற்றவாளிகளோ அவர்கள் நிச்சயமாக கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணைய ...

குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் கூடியிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் உட்பட பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் தொடர்ந்து மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் திறந்த காரில் ஊர்வலம் சென்றார். ...

சென்னை: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளது. இது வலுவடைந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாறவுள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 26 மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது: ...

டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு டெல்லியில் பேருந்து ஒன்றில் ஆண் நண்பரோடு தனியாக சிக்கிய நிர்பயா (புனைவு பெயர்) என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, மற்றும் எதிர்த்தபோது ...

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பலர் போட்டியிட்டனர். பிரிட்டனின் முன்னாள் நிதி அமைச்சரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி ...

இன்று தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- “தமிழகத்திற்கு ஏற்ற வகையில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலைத் தயாரிப்புகள் சட்டம்-2003-ஐ, திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த திருத்தத்தின் மூலம் புகைப்பிடித்தல் மேலும் ஒழுங்குபடுத்தப்படுகிறது. சென்னையில் புகைக்குழல் ...

சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ...

கோவை : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்சுபி பல்லதி (வயது 59) விவசாயி நேற்று இவர் கோவை ரயில் நிலையத்திலிருந்து,பீளமேட்டுக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது மனிபர்சை யாரோ திருடி விட்டனர். இதில் ரூ. 12 ஆயிரம் பணம், ஆதார் கார்டு , பேன் கார்டு, 2 ஏ.டி.எம். கார்டு ...

இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கு தொழிலாக ஜவுளித்தொழில் உள்ளது. நாடு முழுவதும் 1.10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். குறிப்பாக கிராமப்புற பெண்கள் பலர் ஜவுளித்தொழிலில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் 38 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ...