ராகுல் காந்தி பாத யாத்திரையில் இணைந்தார் சோனியா காந்தி..!

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி இன்று பங்கேற்றுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், செப். 30-ஆம் தேதியில் இருந்து கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் பங்கேற்று வருகிறாா்கள். தசரா திருவிழாவுக்காக அக்.
4, 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டிருந்தார். அவரை காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி அக். 3-ஆம் தேதி மைசூருக்கு வருகை தந்தாா். இதையும் படிக்க | உதகைக்கு சுற்றுலா வந்த கேரள பள்ளிப் பேருந்து விபத்து: 9 பேர் பலி இதனிடையே, தசரா திருவிழாவை முன்னிட்டு மைசூரு மாவட்டம், எச்.டி.கோட்டே வட்டம், பேகூா் கிராமத்தில் உள்ள பீமனகொல்லி கோயிலில் புதன்கிழமை சோனியா காந்தி சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

இருநாள்கள் விடுமுறைக்கு பிறகு, மண்டியா மாவட்டத்தில் இன்று காலை தொடங்கிய நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். மேலும், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாகவே தோதல் பிரசாரத்தில் இருந்து சோனியா காந்தி விலகியிருக்கிறாா். நீண்ட நாள்களுக்கு பிறகு, காங்கிரஸ் கட்சியின் பொது நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான தொண்டா்களுடன் சோனியா காந்தி பங்கேற்றுள்ளாா். இது கட்சித் தொண்டா்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.