கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65). டிரைவர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது ராமகிருஷ்ணன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், மோதிரம் உள்பட ...

ட்விட்டர் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்குப் பின்னர் வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை விலைக்கு வாங்கினார். ...

மோர்பி தொங்கும் பாலம் இடிந்து விழுந்ததால் குஜராத் மாநிலம் முழுவதும் நாளை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மோர்பி தொங்கும் பாலம் அறுந்து விழுந்து 134 பேர் உயிரிழந்ததை அடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் நாளை (நவம்பர் 2) துக்கத்தினம் அனுசரிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் தொங்கும் கேபிள் ...

மும்பை: இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மெய்நிகர் நாணயமான கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கிரிப்டோக்களின் மதிப்பு ஜெட் வேகத்தில் எகிறுவதால் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் பலர் ஆர்வம் ...

சென்னை: மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் இல.கணேசன். அவரது அண்ணன் எல்.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா, வரும் 3-ம் தேதிசென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை ...

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. மேட்டூர்: சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 21-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நேற்று மாலை வினாடிக்கு 15,000கன அடியாக ...

தமிழகத்தில் கடந்த 2 ஆம் தேதி (காந்தி ஜெயந்தி அன்று) ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்துவதற்காக பாதுகாப்பு கோரி தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆர்எஸ்எஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், நிபந்தனைகளுடன் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கும் வகையில் மனுக்களின் ...

ஆகஸ்ட் 1 மற்றும் அக்டோபர் 29 க்கு இடையில் மத்திய அரசு தலா ரூ. 1 கோடி மதிப்புள்ள 10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட்டது என்று அந்தத் தேதிகளைக் குறிப்பிட்டு பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) இரண்டு தகவல் அறியும் உரிமைப் (RTI) பதில்கள் தெரிவிக்கின்றன. இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் தேர்தல்களுக்கு முன்னதாக, மிக ...

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் நடக்கும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் உள்ள 12,525 கிரா மங்களிலும் குடியரசு தினம் (ஜன.26), மே தினம் ...

பிரேசில் : பிரேசில் அதிபருக்கான தேர்தலில் 50.9 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 77 வயதான இடது சாரி வேட்பாளர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா வெற்றிபெற்று இருக்கிறார். பிரேசில் அதிபருக்கான தேர்தலில் அதிபர் ஜெயீர் போல்சனரோ மற்றும் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 2-ம் தேதி ...