மதுரையில் காய்கறிகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.90, கேரட் ரூ.80-க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி சந்தைக்கு தென் மாவட்டங்களிலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் அண்மைக் காலமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. ...
விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்ததாக தகவல். சட்ட விதிகளை மீறினார்கள் என குற்றஞ்சாட்டும் ஒரு தரப்பு. விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதிக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை குழந்தை எப்படி பிறந்தது என்று பலரும் குழம்பிய நிலையில் வாடகை தாய் மூலம் அவர்கள் ...
சென்னை: கனடாவில் ரூ.40 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக 116 பேரிடம் ரூ.68 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் புகார்கள் குவிந்து வருவதால் கைது செய்யப்பட்ட பெண் சாமியாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ...
புதுடெல்லி: சிவசேனா கட்சியின் பெயர் சின்னத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் – அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் ...
வெனிசுலா நாட்டில் பெய்து கனமழை காரணமாக நிலச்சரிவு சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 50 பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவின் அரகுவா மாநிலத்தில் உள்ள லாஸ் டெஜெரியாஸ் என்ற இடத்தில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கடந்த சில நாட்களாகவே அங்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு ...
அபுஜா: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 76 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முகமது புகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதியில் 85 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியதால் நீச்சல் தெரியாத பலர் நீரில் மூழ்கியதில் 76 பேர் உயிரிழந்துள்ளனர். ...
மும்பை: காங்கிரஸ் கட்சிக்கு தேவைப்படும் மாற்றத்தைக் கொண்டுவரக் கூடிய விணையூக்கி நான் தான் என்று பேசியுள்ளார் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர். காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு வரும் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கேவும், சசி தரூரும் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி சசி தரூர் மும்பையில் நேற்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ...
சம்பா: பாதுகாப்புப் படையில் ராணுவம், விமானப் படை, கப்பல் படைக்கு 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தேர்வு செய்யும் ‘அக்னி பாதை’ திட்டத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தில் சேர்பவர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும். அதில் ...
புதுடெல்லி/பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 19-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி.யும், கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூரும் மனுதாக்கல் செய்துள்ளனர். இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கட்சித் தலைவர் தேர்தலில் வேட்பு மனுவை ...
அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது ...













