திருநெல்வேலி: “அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரத்தில், ஜனநாயக ரீதியில் முடிவு எடுக்கப்படும். அதுதான் தமிழக முதல்வரின் விருப்பம்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளையொட்டி, திருநெல்வேலியில் உள்ள அவரது சிலைக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ...

பெங்களூர்: பெங்களூரில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக அங்கு இருக்கும் ஐடி நிறுவனங்கள் சரியாக செயல்பட முடியாமல் தவித்து வருகின்றன. இதனால் அந்த ஐடி நிறுவனங்களுக்கு 225 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் பெங்களூரில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதியில் இருந்தே பெங்களூரின் அவுட்டர் ரிங் ரோட் ...

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் லூடிங் பகுதியில் நேற்று நேற்று ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாறியுள்ளனர். 50க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் 20க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. லூடிங் நகரின் அவசரநிலை மேலாண்மைத் துறையிந் துணை இயக்குநர் வாங் பெங் கூறுகையில் ” நிலநடுக்கத்தில் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை ...

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் இருந்து ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை நாளை தொடங்குகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நடைபயணத்தை தேசியக்கொடி வழங்கி தொடங்கி வைக்கிறார். இதற்காக, ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் இருந்து சென்னை வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘பாரத் ...

கோவையில் சீட்பண்ட்ஸ்-ஏலச்சீட்டு நடத்தி ரூ 5 கோடி பணம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் வேலு(வயது53).இவரது மனைவி சத்தியா(45), ...

கோவை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் சோனைமுத்து( வயது 37) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர் . சோனைமுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவை அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே உள்ள தனியார் வங்கியில் கடன் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அதே வங்கியில் ...

கோவை அருகே உள்ள திருமலையாம்பாளையம் ,பகவதி நகரை சேர்ந்தவர் சேது ராஜன் (வயது 37) இவரது மனைவி ராதா மணி(வயது 32) இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் சேலம்- கொச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். செட்டிபாளையம் பைபாஸ் ரோடு அருகே சென்ற போது எந்த வித சிக்னலும் இல்லாமல் ரோட்டில் நிறுத்தி இருந்த ஒரு லாரியின் ...

கோவை: மேட்டுப்பாளையம் ஜல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 50 ) கூலிதொழிலாளி. நேற்று இவர் ஒரு ஆட்டோவில் மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த ஆட்டோ திடீரென்று நிலைத்தடுமாறி  ரோட்டில் கவிழ்ந்தது.இதில் ஆட்டோவில் பயணம் செய்த ராமசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் அவர் இறந்து ...

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனை நடத்தினார்.அப்போது மொபட்டில் வந்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.அதில் மிக்சர் பாக்கெட்டுகளுக்கு அடியில் 4 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மொபட்டும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த பேரூர், ...

கோவை ஒப்பணக்கார வீதியில் கரூர் வைசியா வங்கி உள்ளது. இங்குள்ள ஏ.டி.எம் .எந்திரத்தில் இருந்த மோடத்தை இரவில் யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து அந்தக் கிளையின் மானேஜர் சியாம் சுந்தர் ,கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் .சப்- இன்ஸ்பெக்டர் கோமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா ...