கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பாரா சைலிங் (Parasailing) செய்து அசத்திய கமிஷனர் பாலகிருஷ்ணன்…

கோவை காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில், அக்டோபர் 21 ஆம் தேதி என்.சி.சி மாணவர்கள் மற்றும் ஊர் காவல்படை, ஆயுதப்படை காவலர்களுக்கு பாரா சைலிங் (Parasailing) பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குபாரா சைலிங் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டது. அதனை, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்த்து பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு அங்கு தயார் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு, பாரா சைலிங் செய்து அசத்தினர். திடீரென, காவல் ஆணையாளர் பாரா சைலிங் செய்ததைப் பார்த்த சக காவலர்கள் அவரை உற்சாகப்படுத்திவெகுவாக பாராட்டினர். இது குறித்து காவல் ஆணையாளர் கூறும்போது, ஏற்கனவே தான் பாரா சைலிங் செய்துள்ளதாகவும், அதனால் தான் உடனடியாக பாரா சைலிங் செய்ய முடிந்ததாக தெரிவித்தார்.