ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்த நாளில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கே அங்கு ...

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜன.23) காலை 10 மணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்திற்கு பின் ...

ஈரோடு கிழக்கு தொகுதியில் நானே போட்டியிட வாய்ப்பு இருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகியுள்ளன. அந்த வகையில் அதிமுக திமுக கூட்டணியை தவிர நாம் தமிழர் ...

சென்னை: “நான் சட்டமன்றத்தில் பேசியபோது, கமலாலயத்திற்கு மட்டும் போகாதீர்கள் என்று நான் அப்பவே கூறினேன். அப்போது அண்ணன் ஓபிஎஸ், எந்தக் காலத்திலும் எங்களது கார் அங்கு போகாது என்றார். ஆனால், நேற்று காலையில் இரண்டு பேரும் போட்டிப் போட்டிக் கொண்டு கமலாலயம் சென்று இரண்டு மணி காத்திருக்கின்றனர்” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ...

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் ...

புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து கட்சியின் அமைப்புச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ெவளியிட்ட அறிக்கையில், ‘மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் தலைவர்களை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு காங்கிரஸ் ...

குடியரசு தினத்தையொட்டி, ஜனவரி 26-ம் தேதி வழக்கம்போல் டெல்லியில் கோலாகலமான கொண்டாட்டம் பிரமாண்ட அணிவகுப்புடன் நடைபெறுகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டெல்லியில் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா, சமூக விரோத சக்திகள், பயங்கரவாதிகள் மற்றும் இந்திய விரோத ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தனது நிர்வாகிகளுடன் திடீரென ஆலோசனையில் இறங்கியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸின் திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஜன. 31ஆம் தேதி முதல் ...

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினரின் ஆபரேசன் மின்னல் ரவுடி வேட்டை நடவடிக்கைக்கு பயந்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில், ...

சென்னை: துபாயில் மார்ச் 19ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு நடைபெற உள்ளது. பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவை வளப்படுத்த உயர்கல்வி, தொழில் முறை கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை ஆராய்ந் தறிதல் இம்மாநாட் டின் நோக்கமாகும். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ...