கோவை : கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைதிரியை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகம்மத் ரசித் (வயது 24) இவர் கணபதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் . இவர் வழக்கம் போல தினமும் மாலையில் கல்லூரி மைதானத்தில் தனது நண்பருடன் கால்பந்து விளையாடுவார். அதேபோல நேற்றும் மைதானத்தில் ...
கோவை : நேபாளம் நாட்டை சேர்ந்தவர் லட்சுமணன் பாரதி ( வயது 24)இவர் கோவை அருகே உள்ள ராக்கி பாளையத்தில் வசித்து வருகிறார்.இவர் தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் கோவை ரயில் நிலையம் வந்தார.ரயில் புறப்படுவதற்கு தாமதமானதால் லட்சுமணன் பாரதி ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். ...
கோவை சிறுமுகையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 32). இவரது மனைவி சரண்யா (29). கூலி வேலை செய்த வந்தார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த ...
கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றலா தளங்களில் கோவை குற்றால அருவி ஒன்றாகும். இங்கு உள்ளூர், வெளியூர் மக்கள் மற்றும் வெளி நாட்டு சுற்றலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அருவியில் குளித்து மகிழ்ந்தும், தொங்கு பாலத்தில் நடந்து சென்றும் இயற்கையை ரசித்து சுற்றலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இங்கு வரும் சுற்றலா பயணிகள் வனத்துறையின் ...
கோவை: பொள்ளாச்சி நகரில் மையப்பகுதியில் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகை காலங்கக்ளிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், பயணிகள் கூட்டத்தை பொறுத்து ...
பாரத ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். பாத யாத்திரையை அவர் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ந் தேதி கேரளாவிற்கு சென்றார். ...
கோவை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தின் மீது கடந்த வாரம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் என 7 இடங்களில் தொடர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடந்தது. இதனால் கோவையில் ஒருவித பதற்றம் நிலவியது. இதையடுத்து கோவையில் வெளிமாவட்டங்கள் மற்றும் அதிவிரைவுப்படை, கமாண்டோ படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ...
கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2015-ம் ஆண்டு தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. இங்கு பிரசவித்த பெண்கள் தானமாக அளிக்கும் தாய்ப்பால் பாதுகாக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ள குழந்தைகளுக்கும், ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கும் அளிக்கப்படுகிறது. தாய்ப்பால் தானம் குறித்து அரசு ஆஸ்பத்திரி நிா்வாகம் சாா்பில் தொடா்ந்து விழிப்புணா்வு ...
கோவையில் கடந்த 22ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஒப்பணக்கார வீதியில் உள்ள துணிக்கடை, வி கே.கே மேனன் ரோட்டில் உள்ள பா.ஜ.க அலுவலகம் 100அடி ரோட்டில் உள்ள பா.ஜ.க .நிர்வாகி அலுவலகம் ஆகிய இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது .இதில் குனியமுத்தூர் பகுதியில் பாஜக நிர்வாகி ...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாய் திகழ்ந்து, சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழகக் காவல் துறை சட்டப்படி, நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் இருந்த நிலை. ஆனால், இந்த ...