குடிபழக்கத்தை நிறுத்த முடியாததால் விரக்தியடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தொட்டபாவி, ஆவின் நகரை சேர்ந்தவர் சண்முகம் ,அவரது மகன் சுரேந்தர் ( வயது 32)கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது . மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேந்தர் நேற்று குடிபோதையில் அவரது வீட்டில் மனைவியின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து சிறுமுகை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.