புதுடெல்லி: சீனாவில் பேரழிவை ஏற்படுத்தி வரும் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 வைரஸால் இந்தியா பெரிய அளவில் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் சிசிஎம்பி ஆய்வு மையத்தின் தலைவர் வினய் கே.நந்திகூரி தெரிவித்துள்ளார். மத்திய அறிவியல், தொழில் துறையின் கீழ் சிஎஸ்ஐஆர் அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஹைதராபாத்தில் உள்ள உயிர்மம், ...

சீனாவில் கோவிட் அலை இரண்டு மில்லியன் மக்களை கொல்லக்கூடும் என நிபுணர்கள் அதிர்ச்சி அளித்துள்ளனர். சீனாவில் கடந்த 7ஆம் தேதி அன்று கட்டுப்பாடுகள் வியத்தகு முறையில் தளர்த்தப்பட்டது. தேசிய கோவிட் – 19 அலையுடன் சீனா போராடி வருவதால், நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் அவசரகால வார்டுகள் அதிகமாகி வருகின்றன. டிசம்பரின் ...

2023ம் ஆண்டில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பார்வையை இந்தியா ஈர்க்கக்கூடும், அதே போல் உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டங்கள் மற்றும் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியின் முன்கணிப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் பணவியல் கொள்கை இறுக்கம் காரணமாக உலகப் பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் இருந்தாலும், உக்ரைன் போர் கவலைக்கு காரணமாக இருக்கலாம் எனத் ...

கார் குண்டு வெடிப்பு சம்பவம்: கைது செய்யப்பட்ட நபர்களை பல்வேறு இடங்களுக்கு நேரில் அழைத்து வந்து விசாரணை. கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் உக்கடம் ஜிஎம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ...

கோவையில் இருசக்கர வாகனத்தில் இருந்து ஹெல்மெட்டை திருடி செல்லும் நபரின் சி.சி.டி.வி காட்சிகள்…. கோவை சாய்பாபாகாலனி பகுதியில் இரு வாகனம் ஒன்றின் மேல் அதன் உரிமையாளர் அவரது ஹெல்மெட்டை வைத்து விட்டு அலுவலகத்திற்கு சென்று உள்ளார். பின்னர் அலுவலக வேலையை முடித்து விட்டு வந்து பார்க்கையில் ஹெல்மெட் காணாமல் போயுள்ளது. சிறிது நேரம் அக்கம், பக்கத்தில் ...

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 9-வது நாளான நேற்று டெல்லியில் விவசாயி சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து நடத்திய போராட்டத்தில் பிரபலமான பஞ்சாப்பை சேர்ந்த கோல்டன்சிங் என்கின்ற ராஜேந்திர சிங் கலந்து கொண்டார். அப்போது விவசாய பொதுமக்கள் சமைத்து வைத்திருந்த உணவை அவர்களோடு அமர்ந்து ...

கோவை: நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று நள்ளிரவு கொண்டாடப்படுகிறது.   கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவர்கள் தங்கள் வீடுகளிலும், தேவாலயங்களிலும் ஸ்டார், குடில்கள் அமைத்து, கிறிஸ்துமஸ் மரம் வைத்து வண்ண விளக்குகளால் அலங்கரித்து வெகுசிறப்பாக கொண்டாடுவார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை, கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி கொண்டாடினர். தற்போது ...

கோவை: கடந்த 2020-ம் ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவையில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், உருமாறிய கொரோனா தொற்று பரவல் குறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை காரணமாக தொழில் நிறுவனங்களில் வழிகாட்டு நெறிமுறைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதுகுறித்து கோவை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:- ...

கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை – மங்களூர் விரைவு ரயில் ( எண்:16159) இன்று முதல் ஒரு கூடுதல் படுக்கை வசதி பெட்டியுடன் இயக்கப்படும். காரைக்கால் – எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: ...

கோவை: வெளிநாட்டில் இருந்து தங்கள் பகுதிக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில் சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:- கொரோனா தொற்று மீண்டும் சீனா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்தியாவில் ஒரிசா, குஜராத் ஆகிய மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் ...