பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 9ம் தேதி தொடங்கி வைக்கிறார். அன்று முதல், அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட ...

திருவள்ளூரை அடுத்த சீயஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கும் திருவள்ளூர் காக்களுர் சாலையில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகிவந்தனர். இந்த நிலையில், புத்தாண்டையொட்டி இளம்பெண்ணுக்கு ட்ரீட் கொடுப்பதாகக் கூறி விஜய், ஆட்டோவில் சீயஞ்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே விஜய்யின் ...

கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்பட உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச ...

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை ...

தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி ...

பிரதமர் நரேந்திர மோடி 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக இன்று  ஜனவரி 3-ந் தேதி தொடங்கி வைத்தார் . இந்நிகழ்ச்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ராஷ்ட்ரசந்த் துக்காடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் அமராவதி சாலை வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது . மகாராஷ்டிரா பொது பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பகத் சிங் கோஷ்யாரி, ...

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கு பாஜ தயாராகி வரும் நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்மாதம் 11 மாநிலங்களில் சுற்றுபயணம் செய்கிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 160 தொகுதிகளில் பாஜ வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த இடங்களை கைப்பற்றுவதற்கு வியூகம் வைத்து பாஜ செயல்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் கேரளா, தெலங்கானா, ஆந்திரா, ...

சமீபமாக பனிப்புயலால் உறைந்து போன அமெரிக்காவில் அடுத்து கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக பொழிந்து வரும் கடும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயலால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். ஆயிரக்கணக்கான விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலைகள் பனியால் மூடியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளது. ...

சென்னை: நீண்ட தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை படுக்கை வசதி கொண்டதாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் படுக்கை வசதி கொண்ட 42 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ...

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தம் கொண்டுவர மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் வகையில், வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் முகவரிகள் மற்றும் விளையாடும் வீரர்கள் குறித்த தகவல்களை சரிபார்க்க வேண்டியது கட்டாயம் என்று ...