பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பேரூராட்சியில் 18 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பையை’ சேகரிக்கும் பணியில் 38 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாள்தோறும் 6 டன் மக்கும் மற்றும் மக்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை ஆற்றங்கரையின் ஓரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இரவு நேரத்தில் சிலர் கோழிக் கழிவு ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை பரவலாக நடக்கிறது. அதிகாலை, நள்ளிரவு என எந்த நேரத்திலும் சிலர் ரகசியமாக கஞ்சா விற்பனை நடத்தி வருகிறார்கள். மாவட்ட அளவில், நடப்பாண்டில் இதுவரை 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 420 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கஞ்சா வியாபாரம் குறையவில்லை. அரசூர், கணியூர், நீலாம்பூர், கோவில்பாளையம், அன்னூர், ...

கோவை : ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை யொட்டி இன்று ( செவ்வாய்க்கிழமை) வழக்கத்தை விட தமிழ்நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கோவையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகரில் 2 ஆயிரம் போலீசார், புறநகரில் ஆயிரம் போலீசார் என கோவை மாவட்டம் முழுவதும் ...

உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியா தலைமைத்துவத்தை ...

2668 அடி உயரம் கொண்ட மலை மீது இன்று மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. அதற்கு பக்தர்களுக்கு மலை ஏறுவதற்கு திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 06.12.2022 இன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. திருக்கார்த்திகை காலை 06.00 ...

சிம்லா: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். இதனால் குஜராத் மற்றும் இமாசல பிரதேச தேர்தல் வெற்றிக்கு ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருமாநில தேர்தல் பிந்தைய கருத்துக்கணிப்புகளால் காங்கிரஸ் கட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும் என தெரிகிறது. நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ...

மத்தியப் பிரதேச மாநிலம், ரத்லம் மாவட்டத்தில் நேற்று சுமார் 20 பேர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சரக்கு லாரி ஒன்று சாலைச் சந்திப்பில் வேகமாக வந்ததாகத் தெரிகிறது. எதிர்பாராதவிதமாக பேருந்து நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் ...

கோவை : ”கோவையில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன,” என, பா.ஜ., சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் கூறினார். கோவை பா.ஜ., அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக பா.ஜ., விளங்குகிறது. பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை ...

பணம் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி கட்டாய மத மாற்றம் செய்யும் நடவடிக்கை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் உச்சநீதிமதின்றதில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு ...

நியூயார்க் :’சீனாவின் வூஹானில் உள்ள ஆய்வுக் கூடத்தில், மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ்’ என, அங்கு பணியாற்றிய அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.கொரோனா வைரஸ், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்கும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசின் முதல் பாதிப்பு, சீனாவின் வூஹானில் தான் உறுதியானது. அரசு சாரா ஆய்வுஅங்குள்ள வைராலஜி மையத்தில் இருந்து, ...