நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கினை தற்போது ...

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் 3விமானப்படை விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மோரனாவில் 2 விமானங்களும் விபத்துக்குள்ளாகியுள்ளன என விமானப்படை தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் ...

கோவை விமான நிலையத்தில் தினமும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் விமான நிலையத்துக்கு தினமும் வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்பு அளிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ...

தொழில் போட்டி: அதிவேகமாக இயக்கி மோதி கொண்ட தனியார் பேருந்துகள் – அதிர்ச்சியில் கோவை பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய அதிக பேருந்துகள் தேவைப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் ...

கோவை உக்கடம் புல்லுகாடு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் கபீர் (வயது 36). வீடியோகிராப்பர். இவர் சம்பவத்தன்று வேலையை முடித்து காந்திபுரம் 7-வது வீதியில் நடந்து வந்தார். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் திடீரென கபீர் அருகில் வந்து அவரது கையில் இருந்த செல்போனை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த கபீர் ...

அமெரிக்க ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை எதிரொலியாக, அதானி குழுமம் இரண்டே நாட்களில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்கள் முறைகேடான நடவடிக்கை மூலம் பங்குச்சந்தையை ஏமாற்றி லாபம் சம்பாதித்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த புதன்கிழமை ஆய்வறிக்கை வெளியிட்டது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ...

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிறைவடைந்த நிலையில், விரைவில் தீர்ப்பானது வரவுள்ளது. எனவே இந்த தீர்ப்புக்காக இரண்டு தரப்பும் காத்துள்ளனர். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த ...

குடியரசு தின விழாவிலையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைக்காட்சி மூலம் ஊரையாற்றினார். அவரது உரையில், விடுதலை வேள்வியின்போது,அனைத்துக்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டு, தியாக சீலர்களுக்கு ஆதரவாக நின்ற இவர்களின் குடும்பத்தாரையும் உற்றார் உறவினரையும் நன்றியோடு நினைவு கூர்கிறோம். இந்த நாளில், நம்முடைய ராணுவத்திற்குத் தலைவணங்குகிறோம். புதிய இந்தியாவின் உதயத்தையும் எழுச்சியையும் விரும்பாத புற அழுத்தங்களும் உள்ளார்வக் குழுக்களும் உள்ளன. ...

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இவர் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பிறகு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழக அரசு மக்களின் நலன் கருதி பல்வேறு விதமான ...

வங்கி ஊழியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு வங்கிகள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையாளர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த ...