40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்த ‘பாடும் நிலா’ எஸ்.பி.பி-யின் நினைவாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் அவரது முழு உருவச்சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.கண்ணூர் பய்யன்னூரைச் சேர்ந்த பிரபல சிற்பி கானாயி உன்னி இந்தச் சிலையை வடிவமைத்துள்ளார். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்தப் பிரம்மாண்ட சிலை, கண்ணாடி உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. ...
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 3 மாதத்தில் போதைப்பொருள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கையில் அதிமுக சார்பில் செந்தில்நாதன், காரைக்குடியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் திருப்புத்தூர், ...
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்கவும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் ரொக்கப் பணம் வாங்கும் முறை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய அறிவிப்பின்படி, ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 77 சுங்கச்சாவடிகளில், 66 சுங்கச்சாவடிகளில் இந்த புதிய ...
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் இருந்த அவசரத்தால், கடைசி நேரத்தில் விசிக-வுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “யார் என்ன தொகுதி கேட்கிறார்களோ அதைக் கொடுத்து அனுப்பி விடுங்கள்” என ...
இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு அண்டை நாடுகளில் சுனாமி ...
விஜய் பிரசாரம் செய்ய வந்தால் 4 பக்கமும் சாலையை ஒரு மணி நேரம் மூடுங்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் அளித்த ஒரு புகார் மனுவை அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை குழு செயலாளர் ஆதவ் அர்ஜுன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் ...
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கியுள்ளன. இதனிடையே வருகின்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ளும் விஜய் இன்று திருச்சியில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே மதிய நேரத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் கர்ப்பிணிகள், ...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்ற சுந்தர் சி, இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக சென்னை விமான நிலையம் வந்த சுந்தர் சி விஜய் பற்றி தன்னால் தப்பாக பேச முடியாது என்று சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. சுந்தர் ...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ் பிரிவின் கீழ் இயங்கும் ‘படெல்கோ’ நிறுவனத்தின் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் ...
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் மீது கண்ணாடி பாட்டில் துண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கத்தில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ...













