மேட்டுப்பாளையத்தில் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, CITU தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CITU தொழிற்சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்..

இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலையாற்றத்தை கண்டித்தும் வேலையின்மையை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் ரயில் நிலையம், தபால் தந்தி அலுவலகம், தொலைதொடர்பு அலுவலகம் முன்பு, மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதனை யொட்டி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம்
நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்திற்கு CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் KS . கனகராஜ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் பொது தொழிலாளர் சங்க பொது செயலாளர் S. பாஷா முன்னிலை வகித்தார். மறியல் போராட்டத்திற்கு முன்னதாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் ஒன்றாக கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் CITU தொழிற்சங்கத்தினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக ரயில் நிலையத்திற்கு மறியலுக்குச் சென்றனர்.

பேருந்து நிலையத்தில் ஒன்றாக கூட கூடாது என்று காவல்துறையினர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்கு மறியல் செய்வதற்காக சென்றபோது ரயில் நிலையத்தைச் சுற்றிலும் பல இடங்களில் மேட்டுப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலாஜி, தலைமையிலும் மேட்டுப்பாளையம் காவல்துறை ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் செல்வநாயகம், SBCID உதவி ஆய்வாளர் திலக், மேற்பார்வையில் காவல்துறையினரால் தடுப்பு போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது,

மத்திய  அரசை கண்டித்து கோஷம் எழுப்பிக் கொண்டு வந்த மறியல் போராட்டக்காரர்கள்
தடுப்பை அகற்றிவிட்டு ரயிலை மறிக்க முயற்சி செய்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால்
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பலத்த குரலோடு மறியல் போர் இந்த  மறியல் போர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் மறியல் போர். மறியல் போர் மறியல் போர் CITU சங்கம் நடத்தும் மறியல் போர். இந்த மறியல் போர் இது மறியல் போர் செங்கொடி நடத்தும் மறியல் போர்

மத்திய  அரசே மோடி அரசே

கட்டுப்படுத்து கட்டுப்படுத்து

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து

விற்காதே விற்காதே
பொதுத்துறை நிறுவனங்களை

தனியாருக்கு விற்காதே போன்ற கோஷம் எழுப்பிக் கொண்டே மறியல் போராட்டத்திற்கு சென்றனர்.

மேட்டுப்பாளையம் மற்றும் இந்திய தேசத்திற்கான அத்தியாவசிய கோரிக்கையாக

படித்த இளைஞர்களுக்கு

வேலை கொடு

அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்

இந்திய தேசத்தில்
வகுப்புவாதத்தை புகுத்தாதே

இந்திய தேசத்தை சார்ந்த பொதுமக்கள் மீது
மதவெறியை மண்ணில் விதைக்காதே

ஏழை மக்கள் பயன்படுத்தும்
மேட்டுப்பாளையம் கோவை ரயிலின் கட்டணத்தை குறை

மேம்படுத்து மேம்படுத்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்து

கோவை மேட்டுப்பாளையம்
ரயில்வே பாதைகளை
இரு வழியாக அமைத்திடு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து
மற்ற பகுதிகளுக்கு ரயிலை அதிகப்படுத்து

ஏழை எளிய மக்களின் உரிமைகளை அளிக்க புதிய
சட்டம் இயற்றாதே

நாடாளுமன்றத்தில்
அவசர கதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது,

போராட்டம் துவங்கும் முன் CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர்
கே. எஸ். கனகராஜ் அளித்த பேட்டியில், “மோடி அரசின்
கீழ் விலைவாசி விஷம் போல் ஏறியுள்ளது.

ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு
2 கோடி பேருக்கு வேலை தருவோம் என கூறினர்.
ஆனால், வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திண்டாடுகின்றனர்.

இவைகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெகுஜன அமைப்புகள் சார்பில் அகில இந்திய அளவில் போராட்டம் நடத்துகிறோம்.
விலைவாசி, வேலையின்மை உள்ளிட்ட அனைத்தையும்
திசை திருப்ப ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஒன்றிய அரசு பேசுவதாக சாடினார்.

மோடி அரசு மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை திசை திருப்ப
பாஜக முயற்சிக்கிறது. உடனடியாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.

ரயில் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுக்கா செயலாளர் கனகராஜ் CPIM பொறுப்பாளர்கள் வீரபத்திரசாமி, மெஹபூ நிஷா, ஜீவாமணி, சந்திரசேகர், பூபதி, ராஜன் சிராஜுதீன், மாதர் சங்க பொறுப்பாளர்கள் ராஜலட்சுமி, BSNL சங்கம் பாபு, ராதாகிருஷ்ணன்இன்ஜினியரிங் சங்கம்
சுப்பிரமணி, குணசேகரன் குடிநீர் வடிகால் வாரியம் சசிகுமார், கருணாநிதி.,ஆட்டோ சங்கம் கனி,முஸ்தபா, இதயத்துல்லா சாலையோர சிறு வியாபாரிகள் சங்கம், அப்துல் சமது, ரங்கநாதன், கனகாமணி, யாசர், உழைப்பாளர்கள் மார்க்கெட் வியாபாரிகள் காளீஸ்வரன், பதுருதீன், நிஜாமுதீன்,
ஆனந்தி, ஜோதி,குணவதி சென்னியம்மாள் ,இதயத்துல்லா, லட்சுமி,மல்லிகா, பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் MH.சம்சுதீன், சாமுவேல். முகமது அலி ஜின்னா, சித்திக்,ஆரோக்கிய அப்துல் ரஹீம், செந்தில்குமார், நவ்ஷத் சத்தியா,சானவாஸ், குணசேகரன், மகாலிங்கம், ஆனந்தன், ஹபிபுல்லா. டேனியல், ராஜா அப்பாஸ், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சங்கம் சன்பீர், பஷீர்,அன்சாரி, காட்டூர் யாசர் ஆகியோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்தும் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தியும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்..