கோவை:
ரயில்வே போலீஸ் கூடுதல் இயக்குனர் வனிதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உமா
ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக கோவை ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து கோவை ரயில்வே உட்கோட்ட போலீஸ் நிலையங்களான கோவை,
போத்தனூர், ஊட்டி, மேட்டுப்பாளையம், திருப்பூர் மற்றும் ஈரோடு போலீஸ்
நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் மற்றும் சட்டம் ஒழுங்கு
வழக்குகளின் தற்போதைய நிலைய குறித்தும், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை
விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர். பின்னர் ரயில் நிலையங்களின் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்வது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் பெண் போலீஸ்
இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசாருடன் தேசிய
பெண் போலீசார் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கோவை உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் மற்றும் கோவை ரயில்வே இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்.
Leave a Reply