இந்தியா 30 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதியில் சாதனை -மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பெருமிதம்..!

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நாட்டின் உணவு தானியங்களின் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார்.

கடந்த 12ம் தேதி குஜராத் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஒன்றை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ”உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தல், நாளை முதல் உலக நாட்டிற்கு உணவுப் பொருட்களை வினியோகம் செய்ய இந்தியா தயாராக உள்ளது, தான் அமெரிக்க அதிபர் ஜோபைடனிடம் கூறியதாக தெரிவித்தார்.

உக்ரைன்& ரஷியா இடையே நிலவி வரும் போர், கச்சா எண்ணெய் விலையேற்றம் போன்ற காரணங்களாலும், இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி போன்ற உலகளாவிய பிரச்சினைகள் நிகழ்ந்து வருகின்ற வேளையில், பிரதமர் மோடி இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து பா.ஜ.க. தலைமையகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது, ”தானிய உற்பத்தியால், இந்தியா உணவுப் பொருள் ஏற்றுமதியை செய்ய ஆயத்தமாக உள்ளது. கடந்த சில வாரங்களில் 20 லட்சம் டன் முதல் 30 லட்சம் டன்கள் வரை கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இலங்கைக்கு 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியையும், நேற்று (13ம் தேதி) 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.