ரூ. 54 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஹெட் போன் திருடிய ஊழியர் கைது..!

ஆவடி : கஷ்டப்படாமல் எப்படி கொள்ளையடிக்கலாம். யாரையெல்லாம் எப்படி ஏமாற்றலாம்.. என்பது பற்றி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனி சினிமா படமே எடுக்கலாம்.. அந்த அளவிற்கு சுவாரசியமான உண்மை கதை இப்போது பார்க்கலாம்..

சென்னை ஐயப்பன் தாங்கலி ல் நரந்திர பாபு சங்கீதா மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் கடந்த 13 வருடங்களாக சீனியர் மேனேஜராக பணியாற்றி வருவதாகவும் தங்களுடைய நிறுவனத்தில் தமிழ்ச்செல்வன் என்பவன் கடந்த ஆறு வருடங்களாக அக்சரீஸ் எக்சியூடிவ் எக்சேஞ்சராக வேலை செய்து வந்தான் . சென்னையில் இருந்து வரும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களை ஐபோன் பட்ஸ் ஐபோன் ஹெட்செட் ஸ்மார்ட் போன் வா ட்ச் களை மற்றும் இதர பொருட்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழ்ச்செல்வனுக்கு இருந்து வந்தது. இதை தமிழ்ச்செல்வன் தவறாக பயன்படுத்தி இரண்டு ஆண்டு காலமாக வாடிக்கையாளர்களியிடமிருந்து திருப்பி வரும் பொருட்களை மாற்றிக் கொடுத்துவிட்டு கிளை நிறுவனத்திடம் விற்பனைக்கு உள்ள புதிய பொருட்களை அவருக்கு தெரிந்த சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தனக்கு நிர்வாகம் கிப்ட் கொடுத்ததாகவும் கூறி விற்பனை செய்து வந்தார் .  தலைமை அலுவலகத்தில் இருந்து ஆடிட் கணக்கு சரிபார்த்து சோதனை செய்தனர் . சோதனையில் தமிழ்ச்செல்வன் ரூபாய் 54 லட்சத்து 42 ஆயிரத்து 596 மதிப்புள்ள பொருட்களை திருடியுள்ளான். இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் கொடுக்கப்பட்டது . புகாரில் எந்தவித சமரசத்திற்கும் ஆட்படாத சங்கர் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். துணை ஆணையர் பெருமாள் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பரணி குற்றவாளி தமிழ்ச்செல்வன்(45) தகப்பனார் பெயர் பார்த்திபன் என்பவனை கைது செய்து வழக்கு பதிவு உடன் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் . புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..