அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைப்பு..!

அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் சென்றார்.

அங்கு, ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீசார் தடியடி நடத்தினர். அதனை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் உள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிமுக உள் அரங்கம் சீல் வைக்கப்பட்டதை அடுத்து, அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட ஓபிஎஸ் தற்போது அங்கிருந்து புறப்பட்டார்.