ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்’-அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்.!!

ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்குமாறு பொதுக்குழு உறுப்பினர்கள் முழக்கமிட்ட நிலையில், ஒபிஎஸ்-ஐ கட்சியின் அனைத்து அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிமுக பொதுக்குழு சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அவரது ஆதரவாளர்களை நீக்கும் தீர்மானம் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் `ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க வேண்டும்’ என தொண்டர்கள் கோஷமிட்டனர். அப்போது பொதுக்குழு மேடையில் இருந்த கே.பி.முனுசாமி- சி.வி. சண்முகம் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் ஓபிஎஸ்-ஐ நீக்கும் தீர்மானத்தை உடனே கொண்டுவரவேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து கூச்சல் எழுந்தது.

இதைத்தொடர்ந்து `சொந்த நலன்களுக்காக ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்’ எனக்கூறி ஓபிஎஸ்-ஐ கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகள் மற்றும் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிஎஸ்-உடன் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், பிராபகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் நீக்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன