அட.. அப்படியா!! இனி ரேஷன் வாங்க.. ரேஷன் கார்டே தேவையில்லை.. இந்த “நம்பர்” போதும்.. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு.!!

டெல்லி: மத்திய அரசு ரேஷன்பொருட்கள் பெற்றுக் கொள்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..

இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு கேள்விக்கு பதிலளித்து பேசினார்..

அப்போது அவர் சொன்னதாவது: இந்தியாவில் உள்ள 77 கோடி மக்கள் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருகிறார்கள்..

நாட்டில் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அரசின் சலுகைகளை பெறுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டும், மேலும் அவர்கள் தாங்கள் வேலைக்கு செல்லும் ஊர்களில் ரேஷன் பொருட்கள் பெறுவதில் உள்ள சிக்கலை மனதில் கொண்டும், இந்த திட்டத்தை பிரதமர் மோடி வகுத்துள்ளார்.

இந்த வசதியின் மூலம், புலம்பெயர்ந்த பயனாளி ஒருவர் அவர் வேலைபார்க்கும் ஊரில் இருந்தே ரேஷன் பொருட்களை பெற முடியும்.. அதே சமயத்தில், அவருடைய குடும்பத்தினர், அவர்கள் வசிக்கும் ஊர்களுக்கு திரும்பிய பிறகு, தங்களுக்கு உரிமையான ரேஷன் கடைகளிலும் உணவு தானியங்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த கொரோனா காலத்தில் 19 மாதங்களாக ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு கூடுதலாக தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் யாரும் பட்டினி கிடக்கவில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டது.

பிரதமரின் முன்முயற்சியால், தொற்றுநோய்களின் போது ஒரு நபர் கூட பசியுடன் இருக்கவில்லை என்பது மகத்தான பெருமைக்குரிய விஷயம்… பயனாளிகளுக்கு உணவு தானியத்துக்கு பதில் பணம் கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை.. இதற்கான பலனை நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு மக்கள் வெற்றியாக திருப்பி தந்துள்ளனர். மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு ஊர்களுக்கு இடம் மாறி செல்லும்போது, ரேஷன் பொருட்கள் வாங்க புதிய ரேஷன் கார்டு பெற தேவையில்லை… ஏற்கனவே உள்ள தங்களது ரேஷன் கார்டின் நம்பர் அல்லது ஆதார் கார்டு நம்பரை மட்டும் சொன்னால் போதும்.

பிறகு, பயோமெட்ரிக் மூலம் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு, பொருட்களையும் பெற்றுக்கொள்ளலாம்… எந்த ஊரில் இருந்தாலும், ரேஷன் கார்டு கொண்டு செல்லாமல், ஆதார் எண்ணை தெரிவித்து, பயோமெட்ரிக் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு பொருட்கள் பெறலாம். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டு பெறும் பிரச்சினைக்கும், போலி ரேஷன் கார்டு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்… தொழில்நுட்பம் அடிப்படையிலான “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” திட்டத்தால் இது சாத்தியம் ஆகியுள்ளது” என்றார்.