பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.
இந்த வசதி மூலம் பஞ்சாப் மாநில மக்கள், வாட்ஸ்-ஆப் மூலமாகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்றும் புதிதாக பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் கூறியுள்ளார்.
மாநிலத்தில் 99 சதவீத மக்கள் நேர்மையுடன்தான் இருக்கிறார்கள். மிச்சம் 1 சதவீத மக்களால்தான், மாநில நிர்வாகமே சிதைந்துவிடுகிறது என்றார்.
பகத்சிங் நினைவு நாளில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிக்கப்படும். அதுதான் எனது தனிப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணாக இருக்கும். யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் அதை விடியோவாகவோ ஆடியோவாகவோ எடுத்து எனக்கு அனுப்புங்கள். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனி ஊழல் அதிக காலம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.
Leave a Reply