கன்னட சினி உலகில் முக்கிய நடிகராக இருந்தவர்தான் புனித் ராஜ்குமார். கடந்த 2021 அக்டோபர் 29ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தன்னுடைய 46 வயதில் உயிரிழந்த நடிகர் திடீரென அவர் மரணமடைந்தது திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது ரசிகர்களால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவரது கலைப்பணி, சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் அறிவித்து வெளியிட்டு இருந்தார்.
இந்த விருதை வழங்க ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் கலந்து கொள்ள தனி விமானத்தின் மூலமாக ரஜினிகாந்த் பெங்களூரு சென்றார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அவர் பேசியபோது, “நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்படும் இந்த விருது மிக அவசியமானது. மழை வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு விருது கிடைப்பது புனிதமானது. அவரது குடும்பத்திற்கு இறைவன் அருள் எப்போதும் இருக்கிறது. புனித் ராஜ்குமார் இறைவனின் பிள்ளை.” என்று தெரிவித்துள்ளார்.