நாக்பூரிலிருந்து புனே வரை வெறும் 8 மணி நேரத்தில் பயணிக்கலாம்-இனி இந்தியா வேற லெவல் தான் …!

ந்தியாவில் புதிதாகப் பசுமை நெடுஞ்சாலையை நாக்பூரிலிருந்து புனே வரை 700 கி.மீ தூரத்தை 8 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய சாலையைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளனர்.

மனிதன் வளர்ச்சியைச் சந்தித்தது என்பது அவன் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணிக்கத் துவங்கிய பிறகுதான். பயணம் என்பது ஒருவருக்குப் பலவிதமான அனுபவங்களைத் தரக்கூடியது. பயணம் எவ்வளவு வேகமாக நடக்கிறதோ அவ்வளவு வேகமாக மனிதன் வளர்ச்சியடைந்து கொண்டே செல்வான். இந்த நாடும் முன்னேறிக்கொண்டே செல்லும்.

இந்தியாவில் சாலை போக்குவரத்தை வேகமாக்கத் தேசிய நெடுஞ்சாலைகள் சாலைகளை அமைத்துள்ளது. இதில் பயணிக்கச் சுங்க வரி கட்டிவிட்டு வாகனங்கள் பயணிக்கலாம். இதன் மூலம் பயணம் வேகமானது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த சாலைகளும் மிக முக்கியமான காரணம். இதையடுத்து முக்கியமான நகரங்களை எல்லாம் எக்ஸ்பிரஸ்வே என்ற மேலும் மேம்படுத்தப்பட்ட நெடுஞ்சாலைகளால் மூலம் அரசு இணைத்து வருகிறது.

இதற்கு அடுத்தபடியாக நீண்ட தூரம் இருக்கும் பெரு நகரங்களை இணைத்து இந்த இரு நகரங்களுக்கும் இடையேயான பயண நேரத்தைக் குறைக்கப் பசுமை தேசிய நெடுஞ்சாலை என்ற திட்டத்தை மத்திய போக்குவரத்துத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக இந்த பசுமை சாலையைக் கட்டமைக்கும் திட்டத்தை மத்திய அரசு எடுத்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் எல்லையில் இருக்கும் பகுதி நாக்பூர், இங்கிருந்து புனே வரை சுமார் சாலை மார்க்கமாக 750 கி.மீ தொலைவாகும். இங்கு ஏற்கனவே இருக்கும் தேசிய நெடுஞ்சாலை போகத் தனியாக எக்ஸ்பிரஸ் சாலையைக் கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிதின்கட்கரி ஒரு விழாவில் பேசியுள்ளார். அவர் கூறும் போது:”இந்த புதிய பசுமை வழிச் சாலையில் நாக்பூர்- புனே இடையே பயண நேரம் மிகவும் குறையும் தற்போது சுமார் 14-15 மணி நேரமாக இருக்கும் பயணி நேரம் இந்த சாலை கட்டமைக்கப்பட்டால் வெறும் 8 மணி நேரமாகக் குறையும். இந்த பசுமை எக்ஸ்பிரஸ் சாலைக்கு புனே-சத்ரபதி சாம்பாஜிநகர் நெடுஞ்சாலை எனப் பெயரிட்டுள்ளோம். இது முற்றிலும் ஆக்ஸஸ் கண்டரோல்டு எக்ஸ்பிரஸ் வே என அழைக்கப்படும்.

இந்த சாலை இரண்டு கட்டமாக நடத்தப்படும். முதல் கட்டம் புனே முதல் சத்ரபதி சாம்பாஜிநகர் மற்றும் நாக்பூர் முதல் சாம்பாஜி நகர் ஆகிய இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் இதில் புனே முதல் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியை இரண்டரை மணி நேரத்திலும், சம்ரூதி – மகாமார்க் பகுதியை 5.5 மணி நேரத்திலும் கடக்கும்படி கட்டமைக்கச் செய்யப்பட்டுள்ளது. இது மும்பை புனே எக்ஸ்பிரஸ் வே சாலையை இணைக்கும்படியும் உருவாக்கப்படவிருக்கிறது. ” என கூறினார்.

இதில் முக்கியமான விஷயம் இந்த சாலை ஆக்ஸஸ் கண்ட்ரோல் நெடுஞ்சாலையாகக் கட்டமைக்கப்படுகிறது. அதாவது இந்த சாலையில் வழியில் சிக்னல்கள், தடுப்புகள் மற்ற சாலை குறுக்கீடுகள் என எதுவும் இருக்காது. மாறாக வாகனங்கள் வேகமாகப் பயணிக்க ஏதுவாக சாலைகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த சாலையில் குறிப்பிட்ட ரக வாகனங்கள் அல்லது குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இந்த சாலையில் அனைத்து எண்ட்ரி மற்றும் எக்ஸிட் பகுதிகள் முழுவதும் கண்காணிக்கப்பட்டு அதில் செல்லும் வாகனங்களைப் பார்த்து எந்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும் எந்த வாகனம் செல்ல அனுமதியில்லை என முடிவு செய்து அனுப்புவார்கள். தற்போது புனே முதல் நாக்பூர் வரை உள்ள சுமார் 700க்கும் அதிகமாக கி.மீ தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட வாகனம் எப்பொழுதும் 90 கி.மீ வேகத்தையாவது கடைப் பிடிக்க வேண்டும்.

இன்று மார்கெட்டில் விற்பனையாகும் கார்களில் 90 கிமீ வேகம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை சாதாரணமாகப் பயணிக்கலாம் என்றாலும் 90 கி.மீ வேகத்தில் தொடர்ந்து 8 மணி நேரமாகப் பயணிக்க முடியுமா?

அல்லது இந்த சாலைகளில் ஆங்காங்கே ரெஸ்ட் எடுக்க இடங்கள் வழங்கப்படுமா? இது குறித்த தெளிவான தகவல்கள் இதுவரையில்லை. இந்த 700 கி.மீ தூரத்தை வெறும் 8 மணி நேரத்தில் கடக்கும் நெடுஞ்சாலை குறித்த உங்கள் கருத்துக்களைக் காணலாம் வாருங்கள்.