தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன்மிக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றன. உற்பத்தி, வாகனங்கள், பொறியியல், ஜவுளி, தோல் பொருட்கள், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வளர்ச்சி பெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும் முக்கியப் பங்களிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் அங்கீகரித்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில், 2025-26ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019 (முன்பு திருத்தப்பட்ட போனஸ் சட்டம், 2015) இன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000/- எனவும், இதன்படி மிகை ஊதியம் கணக்கிட மாதாந்திர சம்பள உச்சவரம்பு 5.7,000/- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி உச்சவரம்பைத் தளர்த்தி, அனைத்து ‘C’ மற்றும் ‘D’ பிரிவு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் 2025-26
ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை கீழ்வருமாறு வழங்கப்படும்: இதனால், மிகை ஊதியம் பெறத் தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8.400/- மற்றும் அதிகபட்சம் ரூ.16,800/- வரை பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 60 ஆயிரத்து 497 தொழிலாளர்களுக்கு 367 கோடியே 20 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும். இது தவிர. பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும். அரசின் இந்த நடவடிக்கை. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மேலும் ஊக்கத்துடன் செயல்படவும், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் வழிவகை செய்யும்’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








