20   க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீச்சு: தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை – விவசாயி வேதனை

கோவையில் தான் வளர்த்து வந்த 20 க்கும் மேற்பட்ட எருமை மாடுகள் மீது ஆசிட் வீசப்பட்டதாக விவசாயி புகார் – தோல் உரிந்த மாடுகளுக்கு தீவிர சிகிச்சை

கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை அடுத்துள்ள கல்லாறு ரயில்வே கேட் அருகே தேனி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் கடந்த 2008 முதல் அதே பகுதியில் விவசாயம் செய்து கொண்டு, 40 க்கும் மேற்பட்ட எருமை மாடுகளை வளர்த்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்னர் சுமார் 20 மேற்பட்ட எருமை மாடுகள் மேய்ச்சலுக்கு சென்ற போது, மர்ம நபர்கள் மாட்டின் மீது ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,நேற்று வழக்கம் போல் பண்ணையில் மாடுகளை பராமரித்து வந்த போது மாடுகளின் தோல் உரிந்து பெரிய காயங்களாக மாறியுள்ளது.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொழில் போட்டி முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது, பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.