முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தாலிச் செயின் பறித்த வாலிபர் கைது..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள வெள்ளக்கிணறு, சௌடாம்பிகை நகரை சேர்ந்தவர் ஆனந்தவேல். இவரது மனைவி குஷ்பு ( வயது 30)இவர் நேற்று சைக்கிளில் அங்குள்ள மளிகை கடையில் சாமான்கள் வாங்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரை தடுத்து நிறுத்தி முகவரி கேட்பது போல அருகில் சென்றனர். பின்னர் அவர்களில் ஒருவன் குஷ்பூ அணிந்திருந்த 5 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார்.உடனே குஷ்பூ சத்தம் போட்டார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த அவரது கணவர் ஆனந்தவேல், அவரது நண்பர் முருகன் ஆகியோர் சேர்ந்து கொள்ளையர்களில் ஒருவனை மடக்கிப் பிடித்தனர். ஒருவன் பைக்கில் தப்பி ஓடிவிட்டான். பிடிப்பட்ட ஆசாமிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .போலீசார் அவரை கைது செய்தனர். விசாரனையில் அவர் சித்தாபுதூர், திருமலைச்சாமி வீதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஜெகநாதன் ( வயது 28) என்பது தெரிய வந்தது.தாலி செயின் பறிமுதல் செய்யப்பட்டது.தப்பி ஓடிய பீளமேட்டை சேர்ந்த சரவணன் (வயது 28) என்பவரை தேடி வருகிறார்கள்.