கோவையில் பள்ளி மாணவியை கடத்தி திருமணம்:போக்சோவில் கன்னியாகுமரி வாலிபர் கைது.!!

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர்16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மாணவியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டது .இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் மாணவியை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு ,அந்த வாலிபரையும் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மாணவியின் தாயார் வேலை பார்த்த இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பக்கம் உள்ள நெய்யூரைச் சேர்ந்த சார்லஸ் (வயது 27) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். .அப்போது சார்லஸ் க்கும், அந்த மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டது .சார்லஸ் மாணவியிடம்ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கன்னியாகுமரிக்கு கடத்திச் சென்று குடும்பம் நடத்திய தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பேரூர் அனைத்துமகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு சிறுமியை திருமணம் செய்ததாக சார்லஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.