கோவையில் விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை – பல லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதம்..
கோவை முருகன்பதி கிராம விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தியது. கோவை மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் உள்ள குழந்தைமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மற்றும் தென்னை கன்றுகளை சேதப்படுத்தி சென்றது. கோவை மாவூத்தம்பதி ஊராட்சி முருகன்பதி கிராமத்தில் உள்ள குழந்தைமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த ஒற்றை காட்டு யானை தோட்டத்திலிருந்த வாழை மற்றும் தென்னை கன்றுகளை சேதப்படுத்தி சென்றது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போதுகடந்த 30-நாட்களாக இரவு நேரங்களில் வரும் ஒற்றை காட்டு யானை தர்மராஜ், செந்திகுமார், குழந்தைமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 200தென்னை மற்றும் வாழைகளை யானை சேதப்படுத்தியுள்ளது. வாளையாறு ரயில் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வனத்துறையினர் யானையை விரட்டும் போது தங்களது விளை நிலத்திற்கு புகுந்து அட்டகாசம் செய்வதாகவும், ரயில் பாதை வனப்பகுதியில் இருப்பதால் யானை வரும் போது அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். உடனடியாக வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply