வேலை செய்யும் இடத்திலேயே 20 பவுன் நகைகளை திருடிய வேலைக்கார பெண்-போலீசில் புகார்.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). விவசாயி. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இவரது வீட்டில் வேலை செய்வதற்காக அன்னை நகரை சேர்ந்த அங்கம்மாள் (64) என்பவர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 3-ந் தேதி செல்வராஜின் மகள் இந்துமதி தன்னுடைய நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். 7-ந் தேதி பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 12 பவுன் கேரளா மாலை, 6 பவுன் வைர வளையல், 2 பவுன் கம்மல் உள்பட மொத்தம் 20 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. வீட்டில் வேலை பார்த்த அங்கம்மாள் 4-ந் தேதியில் இருந்து வேலைக்கு வரவில்லை. எனவே அவர் மீது செல்வராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேலைக்கார பெண் அங்கம்மாளை தேடி வருகிறார்கள்.