தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் ஈரோடு வணிகவரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்

CPS திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் கள் 152, 10, 139 ரத்து செய்திடவேண்டும்.

தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கம் மூலமாக செயல்படுத்திட வேண்டும்.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 115 ஐ ரத்து செய்திட வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர் புறநூலகல்கள்,MRB செவிலியர்கள் PPP, COE உள்ளிட்ட இலட்சக்கணக்கான தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலம் வரை ஊதிய வழங்க வேண்டும்

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்.

முடக்கி வைக்கப்பட்டுள்ள DA,EL சரண்டர் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

புதிய மருத்துவக் காப்பீட்டதிட்டத்தில் உள்ள குளறுபடிகளைக் களைந்து உரிய காப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது இக்கூட்டத்தில் வேலை மாநில மாவட்ட வட்ட நிர்வாகிகள் மற்றும் துறையூர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்