மொபட்டில் பதுக்கி வைத்து 4 கிலோ குட்கா கடத்திய மிக்சர் வியாபாரி கைது..!

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர்- மாதம்பட்டி ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாகன சோதனை நடத்தினார்.அப்போது மொபட்டில் வந்த ஒருவர் வைத்திருந்த பையை சோதனை செய்தார்.அதில் மிக்சர் பாக்கெட்டுகளுக்கு அடியில் 4 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மொபட்டும், குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. இதை கடத்தி வந்த பேரூர், காளம்பாளையம், கந்தவேல் நகரை சேர்ந்த சிவக்குமார் ( வயது 40)கைது செய்யப்பட்டார்.இவர் மொபட்டில் கடைகளுக்கு சென்று மிக்சர் வியாபாரம் செய்து வந்தார்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.